தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்டிருக்கும் மருந்து பற்றாக்குறையைப் போக்க அரசு தனது கையிருப்பில் இருக்கும் 3 வித மருந்துகளை கொள்முதல் விலைக்கே விநியோகிக்க இணங்கியுள்ளது.
ஃபுளூ காய்ச்சலுக்கான புரோமெத்தாலின், ஆஸ்துமாவுக்கான சபுத்தமோலும் தியோபிளினும் ஆகிய மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
ரிஷியா-உக்ரேய்ன் போரினாலும் கோவிட் தொற்றினாலும் சீனாவில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் மருந்துகளுக்கான கச்சா பொருள்கள் கிடைக்காததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கைரி தெரிவித்தார்.