27.5 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

தனியார் கிளினிக்குகளில் சிகிச்சைக் கட்டணம் வானளாவ உயர்வு

கடந்தாண்டை விட இவ்வாண்டு தனியார் கிளினிக்குகளின் சிகிச்சைக் கட்டணங்கள் இரு மடங்காக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமது நோய்க்கு வழக்கமாக விதிக்கப்படும் 80 ரிங்கிட் கட்டணமானது இவ்வாண்டு 100 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக கணினித் துறையில் இருக்கும் ஒருவர் குறிப்பிட்டார்.
இன்னொருவர் கூறும்போது நோய்க்கு சிகிச்சை பெற கிளினிக்கிற்கு சென்றபோது, முதல் சிகிச்சைக்கு 120 ரிங்கிட்டும், மறுமுறை சென்றபோது 160 ரிங்கிட்டும் விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மருந்து செலவு, கட்டட வாடகை, குறைந்தபட்ச சம்பள உயர்வு போன்றவை சிகிச்சைக் கட்டணத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக மருத்துவத் துறையினர் கூறுகின்றனர். நிலைமை இப்படியே சென்றால் வசதி குறைந்த மக்கள் தனியார் கிளினிக்குகளின் சிகிச்சையை பெறுவது எட்டாக் கனியாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles