
அரசாங்கத்துடன் எதிர்கட்சிகள் செய்துக் கொண்ட கருத்திணக்க உடன்பாட்டை முடித்துக் கொள்வதற்கான இறுதி நாள் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அதன் தொடர்பில் பிரதமருக்கும் , பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் இடையில் ஓர் இணக்கம் காணப்பட்டிருப்பதாக, மக்களவையில் PKR கட்சியின் ஒழுக்கத்தைப் பேணும் பொறுப்புக்கு தலைமையேற்றிருக்கும் Johari Abdul தெரிவித்தார் . இதற்கு முன்பு, கடந்தாண்டு செப்டம்பரில் கையெழுத்தான அந்த உடன்பாடு எப்போது காலாவதி ஆகுமென்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.
அந்த உடன்பாட்டில் இறுதி தேதி இல்லையென PKR- ரின் தலைவரும் பக்காத்தான் ஹரப்பானின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.இவ்வேளையில், அம்னோ தலைமைச் செயலாளர் Ahmad Maslan , அந்த உடன்பாட்டினை ஜூலை 31 -ஆம் தேதிக்குப் பின்னர் தொடரப் போவதில்லை என கட்சி உச்சமன்றம் முடிவெடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
