
தனது இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் துரோனோ (Tronoh) சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் ச்சூ கியோங் (Paul Yong Choo Kiong ) குற்றவாளியே என ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சியாளிகள் வழங்கிய ஆதாரங்களின்படி, போல் யோங் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகியிருப்பதாக நீதிபதி அப்துல் வாஹாப் முகமட் (Abdul Wahab Mohamed) அறிவித்தார். 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ஈப்போவிலுள்ள மேரு டேசா பார்க் (Meru Desa Park)கிலுள்ள தமது வீட்டில் அவர் அக்குற்றத்தைப் புரிந்திருந்தார்.
