
குடியானவர், மீனவ சங்கங்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் தங்களுக்கு அரசு உதவ வேண்டுமென்ற மகஜரை வழங்கினர்.
குடியானவர் சங்கப் பிரதிநிதிகள் தங்களுக்கு வழங்கப்படும் உதவி நிதியை ரொக்கமாகவும் நேரடியாகவும் வழங்க வேண்டுமென்றும், கால்நடை வளர்ப்போர், சைம் டார்பி நிறுவனத் தோட்டங்களில் கால்நடை வளர்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
காய்கறி பயிரிடுவோர் அரசு தரிசு நிலத்தில் தாங்கள் பயிரிட அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
