
ஆதார அடிப்படையில்தான் ஜசெகவின் பி. குணசேகரனும், ஜி.சாமிநாதனும் சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக Mohideen Yasin (முஹிடின் யாசின்) மக்களவையில் தெரிவித்தார்.
அவர்களுக்கு இலங்கை பயங்கரவாத புலி இயக்கத்துடன் தொடர்பு இருந்ததை துல்லியமாக உணர்ந்த பின்னரே, அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
போலீசார் அதனை புலனாய்வு செய்து அறிவித்த பின்னர், அதனை தாம் முழுமையாக நம்பியே அவர்களைத் தடுத்து வைக்க உத்தரவிட்டதாகவும் முஹிடின் தெரிவித்தார்.
