
பல அரசியல்வாதிகள் அரசியல் நன்கொடைகளைப் பெற்றதாக நீதிமன்ற சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட அம்னோ உதவித் தலைவர் Khalid Nordin (காலிட் நோர்டின்) அது சம்பந்தமாக சட்டம் இயற்றப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
சட்டத்தின் வழி அம்மாதிரியான நன்கொடைகளைத் தணிக்கை செய்து, வெளிப்படைத் தன்மை இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். நிதியை முறைகேடாகப் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமாட் ஸாஹிட் ஹமிடியின் ஊழல் வழக்கில் சாட்சியமளித்த அல்ட்ரா கிரானாவின் டேவிட் டான் என்பவர், துன் மகாதீருக்கு 2.6 மில்லியன் ரிங்கிட்டும், மசீசவின் முன்னாள் தலைமைச் செயலாளர் Ong Ka Suan (ஓங் கா சுவானு) க்கு 920,000 ரிங்கிட்டும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் Shahril Hamdan (ஷாஹ்ரில் ஹம்டானு) க்கு 1.162 மில்லியன் ரிங்கிட்டும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
முஹிடின் யாசின், ஷாபி அப்டால், அனிஃபா அமான், ஹிஷாமுடின் ஹுசேய்ன், ரீஸால் மெரிக்கான் நைனா மெரிக்கான் ஆகியோரும் அரசியல் நன்கொடைகளைப் பெற்றதாகத் தெரிவித்திருந்தார்.
