
கூட்டரசு நீதிமன்றத்தில் தமது வழக்கை நடத்த தகுதியான வழக்கறிஞரை Najib Razak (நஜிப் ரசாக்) நியமித்துக் கொள்ள உரிமை உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் ஒருவர் கிரிமினல் வழக்கை எதிர்கொள்வது இதுவே முதன் முறை என்பதாலும் உலகமே இந்த வழக்கை உண்ணிப்பாகக் கவனித்து வருவதாலும் தகுந்த வழக்கறிஞரை அவர் நியமிக்க அவகாசம் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமக்கு எஸ்ஆர்சி வழக்கில் 12 ஆண்டு சிறைத் தண்டனை, 21 கோடி ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நஜிப், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
