
மற்ற நாடுகளுடன் வர்த்தகத்திலும் தொழில்நுட்பத்திலும் போட்டியிட நமது மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை மிகவும் அவசியம் என Tun Mahathir (துன் மகாதீர்) அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் உரையாடுவதிலும் எழுதுவதிலும் சிறந்த திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் ஆங்கில பாட போதனையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மலாய்க்காரர்கள் மலாய் மொழியை மட்டுமே தெரிந்து வைத்திருப்பது போதுமானது என்ற எண்ணத்தைத் தூக்கி எறிய வேண்டுமென்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.
