
இந்தோனேசிய தொழிலாளர் பிரச்சினையை விரைவில் தீர்ந்து அவர்கள் மலேசியாவில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.
மலேசியாவுக்கு இந்தோனேசிய தொழிலாளர்களின் உதவி தேவைப்படுவதோடு இந்தோனேசியாவுக்கு அதன் மக்கள் அனுப்பும் அந்நிய செலாவணி அவசியம் என்றும் அதிபர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மலேசியாவில் தோட்டத் தொழில், கட்டுமானம், உற்பத்தித் துறை, வீட்டுப் பணிப் பெண்களுக்கு 16 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அதே வேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தோனேசிய தொழிலாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் பணம் 1,336 கோடி ரிங்கிட் எனவும் கணக்கிடப் பட்டுள்ளது.
