
சர்ச்சைக்குரிய மத போதகர் Zamri Vinoth Kalimuthu (ஸம்ரி வினோத் காளிமுத்து(38) பெண்ணை தாக்கியதாகவும், அவரைக் கொல்லப் போவதாகவும் மிரட்டியதாக பெர்லிஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றங்களை மறுத்து அவர் விசாரணை கோரினார். ஒன் செண்டர் மலேசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக இருக்கும் விநோத் ஜூல 14ஆம் தேதி, தாமான் மெலாத்தி இண்டாவில் வீட்டில் அவ்விரு குற்றங்களையும் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதல் குற்றத்திற்கு ஓராண்டு சிறையும் ரிம. 2,000 அபராதமும் விதிக்கப்படும். இரண்டாவது குற்றத்திற்கு 7 ஆண்டு சிறையும் அபராதமும் அல்லது விதிக்கப்படும்,
