
ஜோகூர் பாருவில் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து அந்த மாநகரில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஜோகூர் பாருவில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளம் அதுவென கூறப்பட்டது. Jalan Ayer Molek, Jalan Wong Ah Fook , Jalan Tun Abdul Rasak, Jalan Kolam air மற்றும் Jalan Yahya Awal ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. Sultanah Aminah மருத்துவமனையின் கார் நிறுத்தும் பகுதி, Jalan Ayer Molek மற்றும் Kampung Baru Mohd Amin ஆகிய இடங்களில் பொது கார் நிறுத்தும் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் கார்கள் மூழ்கியதால் வெள்ளம் வடிந்தபிறகு அந்த கார்களை இழுவை வாகனங்கள் இழுத்துச் சென்றதாக பெர்னாமா தகவல் வெளியிட்டது.
