
உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இந்திய ஆடவர்கள் கூட்டரசு நீதிமன்றத்தில் அத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் Tengk Maimun (தெங்கு மைமுன்), Harmider singh Daliwal (ஹர்மிந்தர் சிங் டாலிவால்), Rozariya Bujang (ரோஸாரியா பூஜாங்) ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசுத் தரப்பு செய்த தவறினால் அந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்தது. 2014 மே 21ஆம் தேதி கெடா, குரூணில் அந்த மூவரும் 50.1 கிராம் Monosittil morphin (மோனோசிட்டில்மோர்ஃபின்), 60.7 கிராம் Methamhenthamin (மெத்தாம் பெத்தாமின்) போதைப் பொருளை வைத்திருந்ததாக எஸ். அழகேந்திரன் (31), ஜெ.கிளை மூர்த்தி, ஆர்.சுரேஸ் (34) ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
