27.9 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

புறாக்களுக்கு விஷம் வைத்த நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

🔥 Views : 6
👁 Reading Now : 34

புறாக்களுக்கு விஷம் வைத்து , பிரச்சனையை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர் இரு பெண்கள் , இரு ஆடவர்கள். தொழிற்சாலையின் முன் , பறந்து திரிந்த புறா கூட்டங்களுக்கு விஷம் வைத்ததாக, அந்த நால்வர் மீது, ஷா ஆலாம் செஷன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இரு இந்தோனேசிய ஆடவர்கள் அந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட வேளை, நிர்வாக உதவியாளர்களான இரு உள்நாட்டுப் பெண்கள் குற்றத்தை மறுத்தனர். இதற்கு முன்னர் பொறுப்பற்ற தரப்பினால் கொடுக்கப்பட்ட தவிடுகளை உட்கொண்ட , ஏறக்குறைய 100 புறாக்கள் மடிந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles