
எல்சிஎஸ் எனப்படும் போர்க் கப்பல் கொள்முதலில் ஊழல் நடந்திருப்ப தாக நம்பப்படுவதால் அது சம்பந்தமான அறிக்கை பொதுவில் அறிவிக்க அமைச்சரவை அனுமதித்துள்ளது.
அந்த விவகாரத்தை விசாரணை செய்த முன்னாள் தேசிய கணக்காயரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை எம்ஏசிசியில் ஒப்படைக்கப்பட்டு, ஊழலில் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்ளப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அரசு கடுமையாகக் கருதுவதாகவும் எம்ஏசிசி விசாரணை நடத்தி, ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை நிச்சயம் என்றும் அவர் தெரிவித்தார்.
