28.9 C
Kuala Lumpur
Monday, June 22, 2026

Vetri

சட்டத்திலிருந்து தப்பிக்கவே தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது

🔥 Views : 6
👁 Reading Now : 61

நஜிப் ரசாக்கும் 1எம்டிபி தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே, 1எம்டிபி தணிக்கை அறிக்கையில் திருத்தத்தைச் செய்ததாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டது. இந்த வழக்கில் புலன் விசாரணை அதிகாரியான Haniff Lami (ஹானிப் லாமி), தணிக்கை அறிக்கையில் 2014ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை, இஸ்லாமிய பங்கு பரிவர்த்தனை, அதனை வாங்கியோர், ஜோ லோ 1எம்டிபி கூட்டங்களில் சட்ட விரோதமாகக் கலந்து கொண்ட விவரங்களை நீக்க நஜிப் உத்தரவிட்டதாகவும், அதன் பின்னர் திருத்தப்பட்ட அறிக்கையானது நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாவும் அவர் தெரிவித்தார். தமது பதவியைப் துஷ்பிரயோகம் செய்து நஜிப் அத்தத் தவற்றைச் செய்ததாகவும், அவருக்குத் தூண்டுதலாக அருள் கந்தா செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles