
நஜிப் ரசாக்கின் எஸ்ஆர்சி மேல் முறையீட்டு வழக்கை நடத்த வழக்கறிஞர் முகமட் ஷாபிக்குப் பதிலாக Syed Ibrahim (ஸைட் இப்ராஹிமின்) வழக்கறிஞர் நிறுவனம் நியமிக்கப்பட்டது. . அதன் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, வழக்கை ஆழமாக ஆராய தமக்குக் கால அவகாசம் வேண்டுமென்றும், கூட்டரசு நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்கத் தவறினால், தாம் அந்த வழக்கை நடத்த முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அது பற்றி விளக்கம் அளித்த ஸைட் இப்ராஹிம், நஜிப்பை கைவிடும் நோக்கம் தமக்கு இல்லையென்றும் உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என்பதால் நஜிப்பிற்கு வாதாட தமது நிறுவனம் முன் வந்துள்ளதாகத் தெரிவித்தார். தாங்கள் பணத்திற்காக வாதாடவில்லை என்றும் நஜிபிற்கு நேர்மையான, நியாயமான நீதி கிடைக்கவே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
