
சிலாங்கூரில் , சனி ஞாயிறுகளில், அனைத்து வர்த்தக தளங்களிலும் நெகிழி பைகளின் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்க, அம்மாநில அரசாங்கம் எண்ணியுள்ளது. நெகிழி பைகளுக்கு, 20 சென் கட்டணம் விதிக்கப்பட்டாலும், சிலாங்கூரில் நெகிழிப் பைகளின் பயன்பாடு இன்னும் உயர்வாகவே உள்ளது. 2020-இல் மட்டும், அப்பைகளின் பயன்பாட்டுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து , 58 லட்சம் ரிங்கிட் வசூலிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அதையடுத்து, அதன் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Hee Loy தெரிவித்தார்.
