
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத்தேர்தல் அநேகமாக இவ்வாண்டுக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அம்னோவின் 5 உயர்மட்டத் தலைவர்கள் கலந்தாலோசித்து தேதியை முடிவு செய்வர் என்று தெரிவித்தார். கடந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் 1எம்டிபி பிரச்சினையைப் பெரிதுபடுத்தி ஆட்சியைக் கைப்பற்றியது போலவே, இம்முறையும் போர்க் கப்பல் விவகாரத்தைக் கிளப்பி அவர்கள் முயற்சி செய்வதை உடனுக்குடன் பதிலளித்து, தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டுமென ஸாஹிட் கேட்டுக் கொண்டார்.
