
கடத்தப்பட்ட மது பானங்கள், சிகரெட்டுகள் உட்பட 18 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாட்டிற்குள் இவற்றை கடத்தி வந்ததில் சம்பந்தப்பட்தன் பேரில் 20 மற்றும் 40 வயதுக்குட்பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாண்டு மே மாதம் 2 ஆம் தேதிக்கும் ஜூலை மாதத்திற்குமிடையே இப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையின் மத்திய மண்டல துணை இயக்குனர் Sabri Saad கூறினார். சுங்க வரியை தவிர்க்க முயன்றது, கடத்தல் பொருட்களை பதுக்கி வைத்தது, கடத்தப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்தது மற்றும் நான்கு கொள்கலன்களைக் கொண்ட மதுபானங்களை கடத்த முயன்ற குற்றத்திலும் அவர்கள் சம்பந்தப்பட்டதாக Sabri Saad கூறினார்.
