
Kampong Pondok Yupoh கடனைச் செலுத்தாத தகப்பனாரையும் மகனையும் தாக்கிய நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.18லிருந்து 26 வயதான அவர்கள் Balik Pulav பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யபப்பட்டனர். அந்த நால்வரும் கடனைத் திருப்பிக் கேட்க சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்குச் சென்றபோது, தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது தந்தையும் மகனும் தாக்கப்பட்டனர். மகன் போலீசாரைத் தொடர்பு கொண்ட போது, 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, ஆயுதங்களைக் கொண்டு அவர்களைத் தாக்கியது. அதனைத் தொடர்ந்து அதில் சம்பந்தப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அற்றைக் கூலி தொழிலாளர்களான அந்த நால்வரும் தடுத்து வைக்கப்பட்டனர். காயமடைந்த தந்தையும் மகனும் சிகிச்சை பெற பாலிக் புலாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
