24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

Boustead Naval Shipyard நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது வழக்கு

🔥 Views : 6
👁 Reading Now : 70

கடற்படைக்கு 6 போர்க் கப்பல் கட்டுமானத் திட்ட்டத்தில் நம்பிக்கை மோசடி செய்ததாக போஸ்டெட் நேவல் ஷிப்யாட்(பிஎன்எஸ்) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் Ahmad Ramli Mohd Nor (79) மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் அந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தபோது அதன் 21.08 மில்லியன் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. பிஎன்எஸ் நிறுவனம் கடற்படைக்கு 900 கோடி செலவிலான 6 போர்க் கப்பல்களை நிர்மாணிக்கும் குத்தகையைப் பெற்றது. அத்திட்டத்தின் ஒப்பந்தம் 2013இல் கையெழுத்திடப்பட்டு, 2023க்குள் கப்பல்களை ஒப்படைக்க வேண்டுமென்றிருந்தாலும், இதுவரை ஒரு கப்பல் கூட கட்டி முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles