25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🕊️ மக்கள் ஓசை பணியாளர் யோகேஸ்வரன் காலமானார்

🔥 Views : 2,589
👁 Reading Now : 54

மக்கள் ஓசை நாளிதழின் பணியாளரும், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினருமான யோகேஸ்வரன் இன்று காலை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை மக்கள் ஓசை பணிமனையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகத் துறையிலும் பத்திரிகையாளர் சமூகத்திலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களிடையே மதிப்புமிக்க நபராக அறியப்பட்டார்.

அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் ஊடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles