
மலேசியாவில் உள்ள அந்நிய நாட்டவர்கள் அங்கங்கே கடைகள் திறக்க அனுமதி கொடுப்பது ஏன் என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.இராஜசேகரன் கேள்வியை எழுப்பினார்.
இப்போது எங்கு பார்த்தாலும் அந்நிய நாட்டவர்கள் கடைகளை திறந்த வண்ணம் உள்ளனர்.
வங்காள தேசிகள் உட்பட பல அந்நிய நாட்டவர்கள் மளிகை கடைகள், முடி கடைகள், காய்கறி கடைகள் உட்பட பல கடைகளை திறந்துள்ளனர்.
இது மலேசியர்கள் களுக்கு பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகிறது.

அந்நிய நாட்டவர்கள் கடைகளை திறக்க ஏன் அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.
எங்கு பார்த்தாலும் அந்நிய நாட்டவர்களின் கடைகள் அதிகமாக உள்ளது.
தொழிலுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கடைகளை திறந்து தொழிலை கெடுத்து வருகின்றனர்.
இதற்கு அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
குறிப்பாக கோலாலம்பூரில் இதுபோன்ற கடைகளுக்கு எதிராக விலாயா மாநில அமைச்சர் ஹன்னா இயோ தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



