
சுபாங் ஜெயா ஆலயத்தில் பணியற்றிய தீயணைப்பு வீரர் அடிப் அடாம் காசிமின் மரணம் தொடர்பான சிறப்புச் செயற்குழுவின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைடி தெங்கு ஜாபார் தெரிவித்தார்.
கடந்த டிசம்பரில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயாரிக்க 6 மாத காலம் தரப்பட்டது.
2018 நவம்பர் மாதம் 27ஆம் தேதி சுபாங் ஜெயா இந்து ஆலயத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த அடிப் (24) என்பவர் கடுமையான காயத்துக்கு ஆளாகி, தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அது சம்பந்தமான மரண விசாரணையின் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஃபியா முகமட், 2019 செப்டம்பர் 27ஆம் தேதி, அடிப் இருவருக்கு அதிகமான நபர்களால் தாக்கப்பட்ட காரணத்தினால் மரணமடைந்ததாகத் தீர்ப்பளித்தார்.
