
1எம்டிபி நிதி மோசடி சம்பந்தமான தணிக்கை அறிக்கையில் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அதில் திருத்தம் செய்த நஜிப் ரசாக் மீதான வழாக்கில், அரசுத் தரப்பு தனது வாதத்தை முடித்துக் கொண்டதாக அரசின் வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.
இந்த வழக்கு 2019 நவம்பர் 18இல் தொடங்கி அரசுத் தரப்பில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நஜிப்பிற்கு தூண்டுதலாக இருந்த 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாகி அருள் கந்தா கந்தசாமி அரசின் சாட்சியாக மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இரு தரப்பினரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதத் தொகுப்பை அக்டோபர் 7, 14ஆம் தேதிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீதிபதி ஸைனி மஸ்லான் முன்னிலையில் நடைபெறும் இவ்வழக்கில், அருள் கந்தாவுக்கு குற்றச்சாட்டிலிருந்து விலக்களிப்பது பின்னர் தெரியவரும்.
