
பாசிர் சாலாக் எம்பி Tajuddin Abdul Rahman (தாஜுடின் அப்துல் ரஹ்மான்) ஷா ஆலம் எம்பி Khalid Samad (காலிட் சமாட்) டுக்கு எதிரான நிந்தனை வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் மீது இழப்பீட்டு வழக்கைத் தாக்கல் செய்ய காலிட் சமாட், கினிடிவி ஆகியோருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்தது.
2017 ஏப்ரல் 26ஆம் தேதி, காலிட் தம்மீது அவதூறாகப் பேசியது களங்கத்தை உருவாக்கியதாகக் கூறி, காலிட் சமாட், கினி டிவி ஆகியோர் மீது நிந்தனை தாஜுடின் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
காலிட் வெளியிட்டிருந்த செய்தியில், தாஜுடின் எம்பி பதவிக்குத் தகுதியானவர் இல்லை என்றும், அவர் இஸ்லாத்தின் போதனைக்கு மாறாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந் ததாக அவர் மீதான மனுவில் தாஜுடின் குறிப்பிட்டிருந்தார்.
