
மூடிய இடங்களில் முகக் கவசத்தை அணிவது இனி அவசியமில்லை என்றும் ஆனால் சுகாதார நிலையங்கள், கிளினிக்குகள், முதியோர் பராமரிப்பு இல்லங்கள், பொதுப் போக்குவரத்துகள், மின்னியல் அழைப்பு டாக்சிகள் ஆகியவற்றில் முகக் கவசம் அணிய வேண்டுமென்பது கட்டாயம் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தொற்று இலகுவாகப் பீடிக்க ஏதுவாக இருக்கும் நபர்கள், கூட்டம் நிறைந்த இடங்கள், இரவு விடுதிகள், அரங்குகள், வர்த்தக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் முகக் கவசம் அணிவது அவசியமாகும்.
காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் முகக் கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என கைரி தெரிவித்தார்.
