
ஒரு கோடி பெறுமான பொதுப் போக்குவரத்து கட்டுமானக் குத்தகையை வேறொரு நிறுவனத்திடமிருந்து பெற, லஞ்சம் கொடுத்த நிறுவன நிர்வாகிகள் இருவர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.
40 வயதுமிக்க நிறுவன நிதி மேலாளாரும் சந்தைப் பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 9ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, கைது செய்யப்பட்டனர்.
