
சிறை வளாகத்தில் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு தனி வீடு வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் காட்டுத் தீப்போல் பரவிவரும் பொய் செய்தியை சிறைத்துறை மறுத்துள்ளது. முன்னாள் பிரதமர் நஜீப் சிறை அறையில் இல்லையென்றும் மாறாக அவருக்கு சிறை வளாகத்திலேயே வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது என்று குறுந்தகவலின் Screenshot சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் மூத்த சிறை அதிகாரிகளுக்கானது என்பதோடு காஜாங்கிலுள்ள மூத்த சிறை அதிகாரியின் உறவினர் ஒருவரின் சிறந்த நண்பர் ஒருவர் மூலம் இந்த தகவல் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சிறைத்துறை மறுத்துள்ளது. இது குறித்து தனது முகநூலில் சிறைத்துறை கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உண்மையற்ற தகவல். உடனடியாக நிறுத்துவீர் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
