
15 ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு பாஸ் மற்றும் அம்னோவுக்கிடையே பேச்சுக்களை தொடர்வதா இல்லையா என்பது குறித்து அம்னோ உச்ச மன்றம் முடிவு செய்யும் என அக்கட்சியின் துணைத்தலைவர் முகட் ஹசான் தெரிவித்தார். அம்னோ என்பது நான் அல்ல. அது ஒரு அரசியல் கட்சி. நாம் ஒரு முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனது முடிவு முக்கியம் அல்ல. கட்சியின் முடிவுதான்முக்கியம். எனவே அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுககப்படும் என முகமட் ஹசான் தெரிவித்திருக்கிறார். இதனிடையே பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து தேசிய முன்னணி இன்னும் விவாதிக்கவில்லை என்றும் முகமட் ஹசான் விவரித்தார்.
