26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

பக்காத்தானில் லஞ்சம் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் அதிகம்;அப்துல் ஹாடி அவாங் கின் புதிய கண்டுபிடிப்பு

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் லஞ்சம் வாங்குபவர்களும் லஞ்சம் கொடுப்பவர்களும் அதிகரித்துள்ளதால் அக்கூட்டணியோடு பொதுத்தேர்தலில் ஒத்துழைக்க பாஸ் கட்சி விரும்பவில்லை என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
அக்கூட்டணியில் ஒழுக்கக்கேடு மிக்கவர்களும் இஸ்லாத்திற்கு எதிராகவும் அரச பாரம்பரியம், ருக்குன் நெகாரா, அரசமைப்பு விதி, நாட்டில் அதிகாரத்துவ சமயமாக இஸ்லாத்தை ஏற்காமல் இருப்பவர்கள் அதிகமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பக்காத்தானில் உள்ளவர்கள் மலாய்க்காரர்களையும் பூமிபுத்ராக்களையும் அடியோடு வெறுப்பவர்களாகவும் அளிக்கப்பட்ட சலுகைக்கு மேற்கொண்டும் கேட்பவர்களாகவும் இருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டு இனவாதத்தை தூண்டி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்காத்தான் ஊழல்வாத கூட்டணி என்றால் 1எம்டிபியின் பணம் 9 கோடி ரிங்கிட்டை நஜிப் ரசாக்கிடமிருந்து பெற்று, அதன் பின்னர் சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிலேர் ரியூவ்காசல் பிரவுனுக்கு 1.5 மில்லியனை அவர் ஏன் செலுத்தினார் என்று சிலர் கேள்வியைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles