
கொலை, தற்கொலை சம்பவத்தில் பணி ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர் தமது மனைவியைச் சுட்ட பின்னர், தாமும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று ஜெராண்டுட், கம்போங் மாச்சாங் ராஜா லாபு எனும் இடத்தில் நேர்ந்ததாக ஜெராண்டுட் மாவட்ட போலீஸ் தலைவர் Mazlan Hassan மஸ்லான் ஹசான் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, வீட்டின் சமயலறையில் இருந்து இரு துப்பாக்கி வேட்டுச் சத்தங்களைக் கேட்டதாக அக்கம் பக்கத்தார் தெரிவித்துள்ளாக அவர் குறிப்பிட்டார்.
67 வயதான அந்தப் பெண்மணியின் இடுப்பில் இருந்து ரத்தம் கசிவதைப் பார்த்ததாகவும் அவர் வலியால் துடிதுடித்ததாகவும் தெரிவித்தனர்.
அந்தப் பெண்மணியின் கணவர் நாற்காளியில் அமர்ந்தபடி இறந்து கிடந்ததாகவும், அவரின் இடது பக்க கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்ததாகவும் தெரிவித்தனர்.
தொடக்கக் கட்ட விசாரணையில் நில விற்பனையில் கிடைத்த பணம் சம்பந்தமாக அவ்விருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்ட பின்னர், இந்தக் கொலையும், தற்கொலையும் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
73 வயதான நபருக்கு சுடும் ஆயுத உரிமம் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் காட்டிலாகாவில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
