33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸைட் இப்ராஹிம் மீண்டும் அம்னோவில் இணைந்தார்

14 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபல வழக்கறிஞரான ஸைட் இப்ராஹிம் அம்னோவில் மீண்டும் இணைந்தார்.
அம்னோ தலைமையகத்தில் நடந்த சிறப்புச் சந்திப்பின்போது அவர் தமது உறுப்பினர் பாரத்தைச் சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.
தாம் தற்போது ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அதிகமாக வேலை இல்லாதிருப்பதால் அம்னோவுக்கு உதவி செய்வதொடு கட்சியில் உருமாற்றத்தை ஏற்படுத்த விரும்பதாகத் தெரிவித்தார்.
ஸைட் அம்னோவில் 2000 ஆம் ஆண்டில் இணைந்து 2004இல் கோத்தா பாரு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மறு தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2008இல் அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் 2008இல் பிகேஆரில் இணைந்து, ஓராண்டுக்குப் பின்னர், அதிலிருந்து விலகி கீத்தா கட்சியை தொடக்கினார். ஈராண்டுக்குப் பின்னர் அதனையும் கலைந்து விட்டு, 2017இல் பிகேஆரில் சேர்ந்து, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிலிருந்தும் விலகினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles