25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

அம்னோ, பாஸ், பெரிக்காத்தான் ஆகியவை மக்களிடம் நாடகமாடுகின்றன

பாஸ், அம்னோ, பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற தங்களிடம் பிரிவினை இருப்பதாக நாடகம் ஆடி வருவதாக அமானா தலைவர் முகமட் சாபு குறிப்பிட்டார்.
அமானாவின் பேராளர் மாநாட்டில் உரையாற்றும்போது அவர், பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்ததில் இந்த 3 கட்சிகளுக்கும் சம பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
ஆட்சியைக் கைப்பற்ற அவை ஷெரட்டன் நகர்வுக்கு திட்டமிட்டு காய் நகர்த்தி, ஆட்சியைக் கவிழ்த்து, முஹிடின் ஆட்சியில் இடம் பிடித்தன.
பாஸ் கட்சி பெரிக்காத்தானுடன் நெருக்கம் காட்டி, அம்னோவிடமிருந்து விலகினாலும் அது இன்னமும் இஸ்மாயில் சப்ரியின் ஆட்சியில் அங்கம் வகிப்பது ஏன் என்றும், Muafakat Nasional (முவாஃபக்காட் நேஷனலை) புதுப்பிக்க விரும்பும் செயலானது எப்படியாவது ஆட்சியில் இடம் பிடிப்பதே அதன் நோக்கமென முகமட் சாபு குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles