
மலேசியா63இன் ஒப்பந்தத்திற்கு மாறாக சபா, சரவாக்கை மாநிலங்களாக நடத்துவது நியாயமில்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.
அந்த இரு மாநிலங்களும் தீபகற்ப மலேசியாவைப் போலவே இரு மண்டலங்களாக அங்கீகரிக்கப்பட்டு, வருமானத்தில் சம பங்கு அளிப்பதே நியாயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இயற்கை வளம் அதிகமிக்க அந்த இரு மாநிலங்களும் மற்ற மாநிலங்களைப் போல முன்னேறிய மாநிலங்களாக இல்லாதிருப்தை மக்கள் உணர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அங்குள்ள அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையிடுவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதிலேயே குறியாக இருப்பதால், அந்த நிலைமை என்றும் குறிப்பிட்ட அவர், மக்கள் பொங்கி எழுந்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்
