
கரையோரப் பாதுகாப்பைக் கண்காணிக்க 3 கப்பல் கட்டும் குத்தகையை தாபோங் ஹஹியின் துணை நிறுவனமான Tabun Haji Heavy Industries (தாபோங் ஹஜி ஹெவி இண்டஸ்ட்ரீஸ்) நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது.
73.89 கோடி ரிங்கிட் பெறுமான குத்தகையை அத்துறையில் அனுபவமே இல்லாத நிறுவனத்திற்கு நேரடி குத்தகையின் மூலம் தரப்பட்டு, கப்பல்களை 2020ஆம் ஆண்டில் ஒப்படைக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
அக்கப்பல்களில் இதுவரை எதுவுமே கட்டி முடிக்கப்படவில்லை என்பதால், அதில் ஊழல் நடந்திருக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் நிலவுவதால், அதனைப் பொது கணக்குக் குழு விசாரணை நடத்த வேண்டுமென முஜாஹிட் கேட்டுக் கொண்டார்
