
மூடா கட்சி அரசாங்கப் பதிவைப் பெற்றதிலிருந்து பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கவே விரும்பியதாக அதன் துணைத் தலைவர் Amira Ayisha Abdul Aziz (அமிரா அயிஸா அப்துல் அஸிஸ்) குறிப்பிட்டார்.
மூடா சந்தர்ப்பவாத கட்சி, ஜொகூர் தேர்தலுக்குப் பின்னர் நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டதாக சிலர் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜொகூர் தேர்தலில் பிகேஆருடன் நல்லிணக்கத்தொடு போட்டியிட்டதால், அங்கு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதாகவும் பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்பதால் பக்காத்தானுடன் இணக்கமாக இருக்க மூடா விரும்புவதாக அமிரா தெரிவித்தார்.
