
kelana Jaya (கிளானா ஜெயா)வுக்குச் செல்லும் எல்ஆர்டி ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்பாங் பார்க் நிலையத்தில் நிறத்தப்பட்டதை அடுத்து, அதன் தடத்தில் செல்லும் ரயில் நிலையங்களில் நேற்று மாலை நூற்றுக் கணக்கான பயணிகள் பயணத்தைத் தொடர முடியாமல் பரிதவித்து நின்றனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் ரயில்கள் ஒவ்வொறு நிலையத்திலும் நீண்ட நேரம் நின்று சென்றன. இது பயணிகளுக்குப் பெரும் அசெளகரியத்தை எற்படுத்தி இருந்தது.
சில பயணிகள் நிலை கொள்ளாமல் தவித்து, சமூக ஊடகங்களில் எல்ஆர்டி ரயிலில் பழுது ஏற்படுவது சர்வ சாதாரணமாக இருப்பதாகவும் அது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இது தங்களுக்குப் பெரும் அவஸ்தையாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். மாலை 6.22 மணியளவில் பழுது சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பியது.
