
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பேரரசரைச் சந்தித்த பின்னர், கோலாலம்பூர் வாணிப மையத்திற்குச் சென்று அம்னோவின் மேல்மட்டத் தலைவர்கள் ஐவரைச் சந்தித்த்தார்.
இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.00க்கு
நடந்ததாகவும் அதில் கட்சி தலைவர் Ahmad Zahid Hamidi, துணைத் தலைவர் Mohamad Hasan, மூன்று உதவித் தலைவர்களான Khaled Nordin, Mahdzir Khalid. Ismail Sabri Yacob அடங்குவர்.
நேற்று காலை இஸ்மாயில் சப்ரி பேரரசரைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைப்பது பற்றிப் பேசியிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
இதற்கு முன்னர், தாம் பேரரசரரிடம் நாடாளுமன்றம் கலைப்பது பற்றி விவாதிக்கப் போவதாகக் இஸ்மாயில் வந்துள்ளார். இந்நிலையில் இஸ்மாயில் சப்ரி, பேரரசரசைச் சந்தித்தது அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய விளக்கக் கூட்டம் என அரண்மனைக் காப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
