
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் எழுதிய சுயசரிதைப் புத்தகமான ‘வனாந்திரத்தில் நீதி’ எனும் புத்தகம் சம்பந்தமான விசாரணை அறிக்கை கசிந்தது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் செயலாளர் Noorsiah Mohd Saaduddin (நூர்சியா முகமட் சாடுடின்) கூறும்போது, டோமியின் மீதான விசாரணை அறிக்கை அதிகாரத்துவ ரகசிய சட்டத்தில் அடங்கியிருப்பதாகவும் அது கசிந்தது பற்றித் தாங்கள் புகாரைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கானது அதிகாரத்துவ ரகசியச் சட்டம், குற்றவியல் சட்டம், தகவல் பல்லூடகச் சட்டம் ஆகியவற்றின் வழி விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
டோமியின் புத்தகத்தில் அவர் நீதித் துறை, அரசு ரகசியம், அதிகாரத் துஷ்பிரயோகம். தொழில் ரீதியான கவனயீனம், நிந்தனைச் குற்றச்சாட்டுகள் போன்றவை அடங்கியிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
