28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

அண்ணனைக் கொலை செய்த பிரேம்ராஜுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை

கே.பிரகாஸ் என்ற தமது மூத்த சகோதரரை நோக்கமில்லா கொலை செய்த கே. பிரேம்ராஜ் (39) என்பவருக்கு கூட்டரசு நீதிமன்றம் 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
2014 நவம்பர் 10ஆம் தேதி இரவு 11 மணியளவில் பெட்டாலிங் ஏவோன் கட்டடத்தில் தமது அண்ணனை
பாராங் கத்தியால் வெட்டிக் கொன்றதாக பிரேம்ராஜின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2017இல் பிரேம்ராஜுக்கு மரண தண்டனை விதித்ததது. மேல் முறையீட்டு நீதிமன்றமும் அத்தீர்பினை உறுதிப்படுத்தியது.
எனினும், அத்தீர்ப்பினை ரத்து செய்த கூட்டரசு நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்கள் பிரேம்ராஜ் அந்தக் கொலையைத் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்பதைக் கவனிக்கத் தவறியதாகவும் அதனை நோக்கமில்லா கொலை என கருதி, அவருக்கான மரண தண்டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறையாகத் தீர்ப்பளிப்பதாகக் குறிப்பிட்டது.
அண்ணன் பிரகாஸ், பிரேம்ராஜுக்கான தமது உத்தரவாதத்தில் லோரி ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். பிரேம்ராஜ் மாதாந்திர கட்டணத்தைச் செலுத்தத் தவறியதால், இருவருக்கும் இடையே சண்டை மூண்டதில், அண்ணன் பிரகாஷை தம்பி பிரேம்ராஜ் பாராங் கத்தியால் தாக்கி, கொலை செய்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles