
ஒரே ஆண்டில் நாட்டின் கடன் தொகை 10,000 கோடி ரிங்கிட் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகப் பொது கணக்குக் குழு குறிப்பிட்டுள்ளது.
இத்தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62.4 விழுகாடு ஆக இருப்பது மிகவும் அதிகம் என அக்குழு கவலை தெரிவித்துள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட பொது கணக்குக் குழுவின் தலைவர் Wong Kah Woh (வோங் கா வோ) தேசிய தணிக்கையாளரின் அறிக்கையின்படி 2021இல் நாட்டின் கடன் ரிம. 97,981 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அது 2020இல் 87,956 கோடி ரிங்கிட்டாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தக் கடன் உயர்வால் 2021ஆம் ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் கடன் தொகையானது 63.4 விழுக்காடு என்றும் அதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 1.3 டிரில்லியனாக அதிகரித்துள்ளதாக வோங் கா வோ குறிப்பிட்டார்.
(ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்)
2021இல் கடனை அடைக்க அரசு புதிய கடனாக அரசு 21,720 கோடி ரிங்கிட்டையும் 2020இல் 19,455 கோடி ரிங்கிட்டையும் புதிய கடனாகப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
வருமானத்தில் 16.3 விழுக்காடு கடனுக்கான வட்டியாகச் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு ரிங்கிட் வருமானத்தில் 16 காசுகள் வட்டியாகச் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
