
15ஆவது பொதுத்தேர்தலை இவ்வாண்டில் நடத்தக் கூடாதென கூறி 12 பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சர்கள் பேரரசருக்கு மகஜர் அனுப்பியுள்ளதாகப் பெர்சத்துவின் உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார்.
அரசு மக்களின் உயிருக்கு உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். இப்போது தேர்தலை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல உண்டு என்றும் ராட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
31 அமைச்சர்களில் 13 பேர் தேசிய முன்னணியையும், 12 பேர் பெரிக்காத்தான் நேஷனலையும், நால்வர் ஜிபிஎஸ்ஸையும் ஜிஆர்எஸ், பார்ட்டி பங்சா மலேசியாவை பிரதிநிதித்து தலா ஒருவரும் உள்ளனர்.
