
🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்தோனேசிய பணிப் பெண்களைத் தருவிக்கும் செலவு 15 ஆயிரமாக இருப்பதை மேலும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.
அந்நாட்டின் மனிதவள அமைச்சோடு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இது சாத்தியமாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பணிப் பெண்களை இங்கு கொண்டுவர ஏஜெண்டுகள் 20 ஆயிரம் ரிங்கிட் வரை கோருவதாகப் புகார்களைத் தமது அமைச்சு பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 22ஆம் தேதி வரை நாட்டில் 399,827 இந்தோனேசியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றவதாகவும் அதில், 63,323 வீட்டுப் பணிப் பெண்களும் அடங்குவர்.



