
🔊To listen to this news in Tamil, Please select the text.
தேசிய பள்ளிகளில் கல்வி பயிலும் மலாய்க்காரர் அல்லாத மாணவர்கள் தங்களின் தாய்மொழிப் பாடத்தைக் கற்பதற்குப் பள்ளி நிர்வாகங்கள் முட்டுக்கட்டை போடுவதாக பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி குற்றம் சாட்டினார்.
தாய்மொழிப் பாடங்கள் போதிக்கப்படுவதற்கு பல்வேறு தடங்கலை ஏற்படுத்துவதால், தமிழ், சீன மாணவர்கள் தங்களின் தாய்மொழிப் பாடங்களில் வெறுப்பைக் காட்டி, அதனைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.
எனவே, கல்வி அமைச்சு இதில் முக்கிய கவனத்தைச் செலுத்தி தமிழ், சீன மாணவர்கள் தாய்மொழியைப் பயிலும் கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

பொதுச் சேவைத் துறையில் மலாய்க்காரர் அல்லாதோருக்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை என்றும் மலாய்க்காரர் அல்லாதோருக்குப் பதவி உயர்வு தரப்படாமல் உதாசீனம் செய்யப்படுவதாகவும் அண்மையில் டாக்டர் ராமசாமி குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.



