
🔊To listen to this news in Tamil, Please select the text.
1980களில் மலேசிய அரசாங்கத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அவை சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் போட்டியிடும் தன்மையை ஊக்குவிக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கையை விரைவு படுத்தவும் டெலிகோம் மலேசியா, போஸ் மலேசியா, தெனாகா நேஷனல் மற்றும் கெரேத்தாப்பி போன்ற அரசு ஏஜென்சிகள் தனியார் மயமாக்கப்பட்டன.
அவற்றில் பலகாலம் பணியாற்றிய பெரும்பாலோர் மாதம் 200 ரிங்கிட்டுக்கும் குறைவான ஓய்வூதியத்தையே பெறுவதாக டுங்குன் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Wan Hassan Ramli (வான் ஹசான் ரம்லி) மக்களவையில் தெரிவித்தார்.
மேற்கண்ட தொகையானது இக்காலகட்டத்தில் மிகவும் குறைவான தொகையாக இருப்பதால், அரசு இதில் கவனத்தைச் செலுத்தி அவர்களின் ஓய்வூதியத்தை குறைந்தது மாதமொன்றுக்கு 500 ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.



