27.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சட்டவிரோத வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை – அரசாங்கம் நடவடிக்கை தீவிரம்!

🔥 Views : 2,987
👁 Reading Now : 52

உரிமம், விசா மற்றும் வணிக அனுமதிகளை தவறாக பயன்படுத்தி உள்ளூர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. மக்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்து வரும் புகார்களைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் கூறுகையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். சட்டங்களை மீறி அல்லது வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் வசதிகளை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும் எதிராக சட்டத்தின் அடிப்படையில் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்புகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

“அனைத்து வணிகர்களும், குறிப்பாக வணிக உரிமம், தொழில் அனுமதி மற்றும் தொடர்புடைய சட்ட விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை மீறும் எவருக்கும் சலுகை வழங்கப்படாது,” என்று ஃபஹ்மி வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார சூழலையும் உள்ளூர் வணிகர்களின் நலனையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மேற்கொள்ளப்படும் அமலாக்க நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையோ சமூகத்தையோ இலக்காகக் கொண்டதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பிரதமர் எந்த ஒரு குறிப்பிட்ட குழுவையும் சுட்டிக்காட்டவில்லை. பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து எழுந்துவரும் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டத்தை மதித்து செயல்படுபவர்களுக்கு எந்தவித அச்சமும் தேவையில்லை,” என்று ஃபஹ்மி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles