
இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி, வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி, மலேசியா விஜய் ரசிகர் மன்றத்தின் ஏற்பாட்டில், நாடு முழுவதும் உள்ள ஐந்து திரையரங்குகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இளைய தளபதி விஜயின் திரைப்படம் சுமார் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை மலேசியா முழுவதும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) நிறுவனம் வெளியிடுகிறது.
இதுகுறித்து மன்றத்தின் தலைவர் ஷர்மநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த எங்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் டத்தோ அப்துல் மாலிக் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
சிறப்புக் காட்சி நடைபெறும் திரையரங்குகள்:
- TGV Bukit Tinggi, Selangor
- TGV Tasek Central, Johor
- FST Kajang
- FST Coliseum
- FST Butterworth
இந்தச் சிறப்புக் காட்சியில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



