27.9 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

போக்குவரத்து சிக்னல் கேபிள் திருட்டு: 1 முதல் 2 வாரங்கள் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும்!

🔥 Views : 4,980
👁 Reading Now : 26

ஜாலான் கெபூன் நெனாஸ் பகுதியில் உள்ள இரண்டு போக்குவரத்து சிக்னல்கள் செயலிழந்ததற்கு, மின் கேபிள்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டதே காரணம் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், சம்பவத்தின் காலவரிசையையும் அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் பொதுமக்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவின்படி, கடந்த ஜூலை 17ஆம் தேதி காலை 10.00 மணியளவில், வழக்கமான கண்காணிப்புப் பணியின்போது ஜாலான் செருலிங் மற்றும் ஜாலான் ரெசாக் (சுல்தான் மாமக் உணவகத்திற்கு எதிரில்) அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், போக்குவரத்து சிக்னலின் டிரம் தூண்களில் பொருத்தப்பட்டிருந்த மின் கேபிள்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக இரண்டு சந்திப்புகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் முற்றிலும் செயலிழந்தன.

இந்தச் சம்பவத்தில், ஜாலான் செருலிங்கில் நான்கு டிரம் தூண்களிலும், ஜாலான் ரெசாக்கில் இரண்டு டிரம் தூண்களிலும் இருந்த கேபிள்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை 17ஆம் தேதியே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாலிவொர்க்ஸ் (Taliworks) நிறுவனம், பழுதுபார்ப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்தப் பணிகள் ஒரு முதல் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடையும் வரை, அந்தப் பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles